கருங்கல், செப்.18 : புனித அல்போன்சா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கலை இலக்கிய விழா நடந்தது. கல்லூரி தாளாளர் மற்றும் செயலர் ஆன்றனி ஜோஸ் விழாவை தொடங்கி வைத்தார். தொடர்ந்து துறைகளுக்கிடையே மேடை போட்டிகள், மேடையல்லாத போட்டிகள் பிரிவில் நடனம், பாடல், ஓவியம், கதை, கவிதை எழுதுதல், டேப்லோ, நாட்டுப்புற நடனம், பரதம், திருவாதிர நடனம் போன்ற போட்டிகள் நடைபெற்றன. 2வது நாள் நடந்த நிறைவு விழாவில் சிறப்பு விருந்தினராக பிரபல பாடகர் மற்றும் இசையமைப்பாளர் அரவிந்த் நாயர் பங்கேற்றார். தொடர்ந்து பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. வெற்றி பெற்ற அணிகளுக்குப் பரிசுகளையும், கேடயங்களையும் கல்லூரி தாளாளர் மற்றும் செயலர் பேரருட்தந்தை ஆன்றனி ஜோஸ், கல்லூரி முதல்வர் அருட்தந்தை முனைவர் மைக்கேல் ஆரோக்கியசாமி எஸ்டிபி, துணை முதல்வர் சிவனேசன் ஆகியோர் வழங்கினர்.
The post புனித அல்போன்சா கல்லூரியில் கலை இலக்கிய விழா appeared first on Dinakaran.