நாகர்கோவில், செப்.18 : நாகர்கோவில் மேலகிருஷ்ணன்புதூரில் கன்னியாகுமரி மாவட்ட அளவிலான அமெச்சூர் பாடிபில்டர் போட்டி நடந்தது. மாநில உடல் வலுச்சங்க செயலாளர் கண்ணன் தலைமை வகித்தார். பொருளாளர் முருகேசன் வரவேற்றார். போட்டிகளை விஜய்
வசந்த் எம்.பி. துவக்கி வைத்தார். போட்டி உடல் எடை அடிப்படையில் பல்வேறு பிரிவுகளாக நடத்தப்பட்டது. இதில் 175 வீரர்கள் கலந்து கொண்டனர். இதில் 50 கிலோ எடை பிரிவில் அனிஷ், மரியதாசன், சஞ்சய் ஆகியோர் முதல் 3 இடங்களை பிடித்தனர். 55 கிலோ பிரிவில் ஜனிஷ், விஷால், சந்துரு ஆகியோர் முதல் மூன்று இடத்தை பிடித்தனர். 60 கிலோ பிரிவில் வசந்த், விசேக், சுதிர் ஆகியோர் முதல் மூன்று இடத்தை பிடித்தனர். 65 கிலோ எடை பிரிவில் தன்ஸ், டோனிமோன், அபினேஷ் முதல் மூன்று இடத்தை பிடித்தனர்.
70 கிலோ பிரிவில் அஜித், அஜித்குமார், அனிஷ்குமார் ஆகியோர் முதல் மூன்று இடத்தை பிடித்தனர். 75 கிலோ பிரிவில் மகேஷ்வரன், அரவிந்த், ஜென்னி ஆகியோர் முதல் மூன்று இடத்தை பிடித்தனர். 80 கிலோ பிரிவில் வின்சென்ட்ராஜ், சஜித், எபினேஷ் ஆகியோர் முதல் மூன்று இடத்தை பிடித்தனர். 85 கிலோவுக்கு மேல் எடை பிரிவில் விஷ்ணுராஜ், ஆகாஷ் ராம், சதிஷ் ஆகியோர் முதல் மூன்று இடத்தை பிடித்தனர். இறுதியில் சாம்பியன் ஆப் சாம்பியன் பட்டத்தை வின்சென்ட்ராஜ் பெற்றார். 2ம் பரிசை அஜித், 3ம் பரிசு தன்ஸ் ஆகியோர் பெற்றனர்.வெற்றி பெற்று முதல் மூன்று இடத்தை பிடித்தவர்களுக்கு 55 இஞ்ச் டிவி, பிரிட்ஜ், கிரைண்டர் பரிசாக வழங்கப்பட்டது. மேலும் ஒவ்வொரு பிரிவிலும் முதல் மூன்று இடம் பிடித்தவர்களுக்கு ஆணழகன் சிலை, பதக்கம், சான்றிதழ் வழங்கப்பட்டது. 4 முதல் 10 இடம் பிடித்தவர்களுக்கு ஆணழகன் சிலை, சான்றிதழ் வழங்கப்பட்டது. போட்டிகளை மாவட்ட உடல் வலுச்சங்க செயலாளர் சரவண சுப்பையா, ஆல்பர்ட் நெல்சன் ஆகியோர் நடுவர்களாக இருந்து நடத்தினர். இதில் ஏராளமான வீரர்கள், ஜிம் பயிற்சியாளர்கள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
The post நாகர்கோவில் அருகே மாவட்ட அளவிலான ஆணழகன் போட்டி 175 வீரர்கள் பங்கேற்பு appeared first on Dinakaran.