கர்நாடக அருந்ததியர் கூட்டமைப்பின் ஆலோசனை கூட்டம்

கோவை, செப்.17: கர்நாடக அருந்ததியர் கூட்டமைப்பின் ஆலோசனைக் கூட்டம் பெங்களூர் காந்தி பவனில் நடைபெற்றது. கர்நாடகா மாதிகா கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் கேசவ மூர்த்தி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் கோவை தென்னிந்திய அருந்ததிய கூட்டமைப்பு நிர்வாகிகள் கலந்துகொண்டனர். இந்த ஆலோசனை கூட்டத்தில், பஞ்சாப் பட்டியலின இட ஒதுக்கீடு குறித்த உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் அனைத்து மாநில மாதிகா தலைவர்கள் ஒருங்கிணைந்து அந்தந்த மாநிலங்களில் கோரிக்கை எழுப்பி இட ஒதுக்கீடு பெற வேண்டும். மாதிகா கூட்டமைப்பின் சார்பில் பெங்களூரில் மிக விரைவில் ஒரு லட்சம் பேர் கலந்து கொள்ளக்கூடிய அரசியல் அதிகார உரிமை மீட்பு மாநாடு நடந்த வேண்டும்.

அருந்ததியர் உள் இட ஒதுக்கீடு உச்ச நீதிமன்ற தீர்ப்பை சீராய்வு செய்ய வேண்டும். அதுவரை இந்த தீர்ப்பை நிறுத்தி வைக்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்துள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவனுக்கு கண்டனம் தெரிவித்தும் ஆகிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில், எம்பி அனுமந்தய்யா, விடுதலை வேங்கைகள் கட்சியின் தலைவரும் இந்தியா மாதிகா செம்மார் கவுன்சில் மற்றும் தென்னிந்திய அருந்ததிய கூட்டமைப்பு பொதுச் செயலாளர் தமிழின்பன், மாதிக ரக்க்ஷன வேதிகா தலைவர் ரகு ஸ்டீபன், பொருளாளர் கோபி, கர்நாடக பொறுப்பாளர்கள் சேபரத், நிஷா, பிரசாத் மகாராஷ்டிரா, மாருதி, கேரளா கண்ணன் மற்றும் ஹரிராமன் உள்ளிட்ட பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.

The post கர்நாடக அருந்ததியர் கூட்டமைப்பின் ஆலோசனை கூட்டம் appeared first on Dinakaran.

Related Stories: