திமுக பவளவிழாவையொட்டி இல்லம்தோறும் கொடி பறக்கட்டும்

 

கோவை, செப். 11: கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவை ஏற்று, திமுக பவள விழாவையொட்டி, கோவை மாநகர் மாவட்ட திமுக எல்லைக்கு உட்பட்ட அனைவரது இல்லங்கள், அலுவலகங்கள் மற்றும் வணிக வளாகங்களில் திமுக கொடி ஏற்றி, மகிழ்ச்சியை கொண்டாட வேண்டும்.

திமுக கொடி பறக்கும் வீடுகள், அலுவலகங்கள் மற்றும் வணிக வளாகங்களின் புகைப்படங்களை அந்தந்த பகுதி நிர்வாகிகள், செயல்வீரர்கள் வரும் செப்டம்பர் 14ம் தேதிக்குள் கோவை மாநகர் மாவட்ட திமுக அலுவலகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டுகிறேன். இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.

The post திமுக பவளவிழாவையொட்டி இல்லம்தோறும் கொடி பறக்கட்டும் appeared first on Dinakaran.

Related Stories: