கோவை, செப். 19: எஸ்என்எஸ் கல்வி நிறுவனத்தில் முதலாம் ஆண்டு இளங்கலை மற்றும் முதுகலை மாணவர்களுக்கு பயிற்சி முகாம் நடைபெற்றது. குழுமங்களின் தலைவர் டாக்டர் எஸ்.என்.சுப்ரமணியன், தாளாளர் டாக்டர் ராஜலட்சுமி மற்றும் தொழில்நுட்ப இயக்குநர் டாக்டர் எஸ்.நளின் விமல்குமார் ஆகியோரது தலைமையில் நிகழ்ச்சி நடந்தது. மும்பையில் உள்ள சி5ஐ தனியார் நிறுவனத்தின் திறமை கையகப்படுத்தல் துறை மூத்த மேலாளர் ஹேமல் தாக்கர் தலைமை விருந்தினராக பங்கேற்றார்.
எஸ்என்எஸ் நிறுவன தலைவர்கள் டேனியல் மற்றும் அருணாசலம், எஸ்என்எஸ் தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் எஸ்என்எஸ் பொறியியல் கல்லூரி முதல்வர்கள் நிகழ்ச்சிக்கு முன்னிலை வகித்தனர். கடந்த கல்வியாண்டில் சிறந்த மாணவர்களுக்கு விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மாணவர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
The post எஸ்என்எஸ் கல்வி நிறுவனத்தில் சிறந்த மாணவர்களுக்கு விருது appeared first on Dinakaran.