குரூப்-2 தேர்வை 33 ஆயிரம் பேர் எழுதுகின்றனர்

 

கோவை, செப். 14: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் குரூப்2, குரூப்-2ஏ காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்ப கடந்த ஜூன் 20ல் அறிவிப்பி வெளியிடப்பட்டது. வணிக வரித்துறை கூடுதல் அலுவலர், உதவி பதிவாளர், சென்னை காவல் சிறப்பு பிரிவு அதிகாரி, கூட்டுறவு ஆய்வாளர் அறநிலையத்துறை கணக்கு ஆய்வாளர், வருவாய் உதவியாளர் உள்ளிட்ட 2,327 இடங்களுக்கு முதல்நிலை எழுத்து தேர்வு இன்று நடக்கிறது. இந்த தேர்வினை கோவை வடக்கில் 42, கோவை தெற்கில் 41, பொள்ளாச்சி 22 மற்றும் மேட்டுப்பாளையத்தில் 8 மையங்கள் என மொத்தம் 113 மையங்களில் தேர்வு நடக்கிறது.

இத்தேர்வினை 33 ஆயிரத்து 490 பேர் எழுதவுள்ளனர். தேர்வுகளை கண்காணிக்க வருவாய் துறையின் மூலம் 113 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். தவிர, துணை கலெக்டர் நிலையில் 7 பறக்கும் படையினர் நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்வர்கள் வந்து செல்ல சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தேர்வு மையங்களில் பாதுகாப்பு பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர். தேர்வர்கள் காலை 9 மணிக்கு முன்பு தேர்வு மையத்திற்கு வருகை புரிய வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

The post குரூப்-2 தேர்வை 33 ஆயிரம் பேர் எழுதுகின்றனர் appeared first on Dinakaran.

Related Stories: