மேட்டுப்பாளையம், செப்.11. பாஜவின் உறுப்பினர் சேர்க்கை இயக்கமான சங்கதன் பர்வா, சதாஸ்யத அபியான் என்ற திட்டத்தை பிரதமர் மோடி அண்மையில் துவக்கி வைத்தார். இதனை தொடர்ந்து மேட்டுப்பாளையத்தில் ஒன்றிய பாராளுமன்ற விவகாரத்துறை மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் எல்.முருகன் நேற்று உறுப்பினர் சேர்க்கை திட்டத்தை துவக்கி வைத்தார். அப்போது, அப்பகுதியில் இருந்த மக்களிடம் மொபைல் செயலி மூலமாக ஆன்லைனில் உறுப்பினர் பதிவு மற்றும் வீடு, வீடாக சென்று ஒன்றிய அரசின் திட்டங்களை எடுத்துக்கூறி உறுப்பினர்களை சேர்த்தார்.
நிகழ்ச்சியின்போது, பாஜ வடக்கு மாவட்ட தலைவர் சங்கீதா, துணைத்தலைவர் விக்னேஷ், மாநில செயற்குழு உறுப்பினர் சதீஷ்குமார், நீலகிரி தொகுதி பொறுப்பாளர் நந்தகுமார், மாவட்ட பொதுச்செயலாளர் நந்தகுமார், காரமடை கிழக்கு ஒன்றிய தலைவர் சாமிநாதன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் உட்பட தொண்டர்கள் பலர் உடன் இருந்தனர்.
The post மேட்டுப்பாளையத்தில் பாஜ உறுப்பினர் சேர்க்கை appeared first on Dinakaran.