துடியலூர், பெ.நா.பாளையத்தில் 400 விநாயகர் சிலைகள் வெள்ளகிணர் குட்டையில் கரைப்பு

 

பெ.நா.பாளையம், செப்.10: கோவை துடியலூர்- சின்னதடாகம் மற்றும் பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் இந்து அமைப்புகள் மூலம் வைக்கப்பட்டிருந்த 400 விநாயகர் சிலைகள் நேற்று வெள்ளிகிணர் குட்டையில் கரைக்கப்பட்டன. விநாயகர் சதுர்த்திக்காக கடந்த சனிக்கிழமை இந்து முன்னணி சார்பில் 351 மற்றும் இதர அமைப்புகள் சார்பில் 49 விநாயகர் சிலை வைக்கப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டது. நேற்று இந்த சிலைகள் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு வெள்ளிகிணர் குட்டையில் கரைக்கப்பட்டன. தண்ணீர் இல்லாத இந்த குட்டை நடுவில் செயற்கை குளம் அமைக்கப்பட்டது.

முன்னதாக, துடியலூரில் இந்து அமைப்புகள் நடத்திய நிகழ்ச்சியில் பாஜக முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா கலந்து கொண்டு விநாயகர் ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். கேரளாவில் கரைத்த தமிழ்நாட்டு விநாயகர் சிலைகள்: தடாகம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட ஆனைகட்டியில் கேரள எல்லை பகுதி உள்ளது. இங்கு குடியிருக்கும் தமிழ்நாட்டை சேர்ந்த பொதுமக்கள் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வைத்து வழிபட்ட 16 விநாயகர் சிலைகளை தடாகம் காவல் துறை மற்றும் கேரள போலீஸ் பாதுகாப்புடன் கேரள பகுதியான கோட்டத்துறை ஆற்றில் நேற்று கரைத்தனர். இதில், கேரளா, தமிழ்நாட்டை சேர்ந்த பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

The post துடியலூர், பெ.நா.பாளையத்தில் 400 விநாயகர் சிலைகள் வெள்ளகிணர் குட்டையில் கரைப்பு appeared first on Dinakaran.

Related Stories: