சென்னை பெரம்பூர் ராகவன் தெருவில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் ஏடிஎம் செயல்பட்டு வருகிறது. நேற்று இரவு மர்ம நபர்கள் சில பூட்டியிருந்த ஏடிஎம் மையத்தின் கதவை உடைத்து உள்ளே நுழைந்தனர்.
பிறகு ஏடிஎம் மெஷினையும் உடைத்து கொள்ளையடிக்க முயற்சி செய்துள்ளனர். இதற்காக பணம் செலுத்தும் டெபாசிட் மெஷினை உடைத்தபோது அலாரம் ஒலித்துள்ளது. சத்தத்தை கேட்டவுடன் கொள்ளையடிக்கும் முயற்சியை கைவிட்டு விட்டு மர்ம நபர்கள் தப்பியோடினர்.
ஏடிஎம் இயந்திரத்திலிருந்து அலாரம் ஒலித்ததாக தகவல் அறிந்த பெரம்பூர் செம்பியம் போலீசார், உடனடியாக ஏடிஎம் மையம் உள்ள இடத்திற்கு வந்து ஆய்வு நடத்தியுள்ளனர். பணம் செலுத்தும் டெபாசிட் மிஷினை மர்ம நபர்கள் உடைத்து உள்ளதை போலீசார் உறுதி செய்த நிலையில், ஏடிஎம் மையத்தில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி காட்சிகளை கைபற்றி பணத்தை கொள்ளையடிக்க முயற்சி செய்த மர்ம நபர்களை தேடி வருகின்றனர். இந்த ஏடிஎம் மிஷினை உடைத்து பணத்தை திருட முயற்சி செய்த சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post சென்னை பெரம்பூரில் வங்கியின் ஏடிஎம் மெஷினை உடைத்து பணத்தை திருட முயற்சி appeared first on Dinakaran.