ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அடுத்த காமன்கோட்டையில் ரூ.100 ஜெராக்ஸ் நோட்டுகளை வைத்திருந்த இளைஞர் கைது செய்யப்பட்டார். ஏ4 தாளில் 100 ரூபாயை ஜெராக்ஸ் எடுத்து வெட்டி வைத்திருந்த இளைஞர் கார்த்திக்கை போலீஸ் கைது செய்தது. கைது செய்யப்பட்ட இளைஞரிடம் இருந்து 31,600 போலி 100 ரூபாய் நோட்டுகளை போலீஸ் பறிமுதல் செய்தது.