சீதாராம் யெச்சூரி மறைவு சென்னையில் கட்சித்தலைவர்கள் அஞ்சலி

சென்னை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி மறைவையொட்டி சென்னையில் உள்ள கட்சி அலுவலகத்தில் சீதாராம் யெச்சூரி படத்திற்கு அரசியல் கட்சி தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி உடல்நல குறைவு காரணமாக நேற்று முன்தினம் காலமானார். இந்நிலையில் சீதாராம் யெச்சூரி மறைவையொட்டி சென்னை தி.நகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைமை அலுவலகமான பாலன் இல்லத்தில் அவரது படத்திற்கு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் மற்றும் கட்சி நிர்வாகிகள் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

தொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது படத்திற்கும் முத்தரசன் மரியாதை செலுத்தினார். இதையடுத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, திமுக செய்தி தொடர்பு தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன், தமிழ்நாடு சிறுபான்மை ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ் மற்றும் தமாகா தலைவர் ஜி.கே.வாசன் உள்ளிட்டோர் சீதாராம் யெச்சூரிக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

 

The post சீதாராம் யெச்சூரி மறைவு சென்னையில் கட்சித்தலைவர்கள் அஞ்சலி appeared first on Dinakaran.

Related Stories: