சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: புதுச்சேரி மக்களை பாதிக்கும் வகையில் அறிவிக்கப்பட்டுள்ள மின்கட்டண உயர்வு மற்றும் நிலுவை தொகையை செலுத்துமாறு அறிவித்துள்ள என்.ஆர்.காங்கிரஸ் – பாஜ கூட்டணி அரசை கண்டித்தும், மக்கள் நலன் கருதி மின்கட்டண உயர்வை உடனடியாக திரும்பப்பெற வலியுறுத்தியும், அதிமுக புதுச்சேரி மாநிலத்தின் சார்பில், வருகிற 16ம் தேதி (திங்கள்) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பழைய பஸ் நிலையம், அண்ணா சிலை அருகில் புதுச்சேரி மாநில அதிமுக செயலாளர் அன்பழகன் தலைமையில் உண்ணாவிரத போராட்டம் நடைபெறும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
The post எடப்பாடி அறிவிப்பு புதுச்சேரியில் 16ம் தேதி அதிமுக உண்ணாவிரதம் appeared first on Dinakaran.