தஞ்சாவூர், செப். 12: தஞ்சாவூர் மாவட்டத்தில் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு வட்டம், ஒரத்தநாடு கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் வகுப்பறையில் கல்லூரி மாணவ, மாணவிகளுடன் மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் கலந்துரையாடினார். தொடர்ந்து, ஒரத்தநாடு கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் அமையப் பெற்றுள்ள அருங்காட்சியகத்தை பார்வையிட்டு, கால்நடைப் பண்ணை வளாகத்தில் செயல்பட்டு வரும் கறவை மாட்டு பண்ணை பிரிவு, கறவை மாட்டு கொட்டகையில் வளர்க்கப்படும் கறவை மாடு வளர்க்கும் முறை பற்றியும், தாது உப்புக் கலவை உற்பத்தி பிரிவு, ஹெர்ரிங்போன் பார்லர், பால் கறவை அமைப்பு கால்நடை ஊட்டச்சத்தியல் துறையில் செயல்பட்டு வரும் தீவன ஆலை செயல்பாடு குறித்தும் மாவட்ட கலெக்டர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் ஒரத்தநாடு அரசு மருத்துவமனையில் மாவட்ட கலெக்டர், உள்நோயாளிகள் பிரிவு, வெளிநோயாளிகள் பிரிவு, அவசர சிகிச்சை அறை போன்ற பல்வேறு மருத்துவமனையின் செயல்பாடுகள் குறித்து திடீர் ஆய்வு மேற்கொண்டு, நோயாளிகளிடம் வழங்கப்படும் சிகிச்சைகளைப் பற்றி கேட்டறிந்தார். மேலும், பட்டுக்கோட்டை தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கில் வைக்கப்பட்டுள்ள பொருட்களின் இருப்பு மற்றும் தரம் விபரங்கள் குறித்தும், பட்டுக்கோட்டை கோட்டாட்சியர் மற்றும் வட்டாட்சியர் அலுவலகத்தின் கோப்பு விவரங்கள் பணிகளின் செயல்பாடுகள் குறித்தும் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
The post மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்காக மழை வந்ததும் வந்தது வானவில் ஆய்வுக்கு பின் அதிகாரிகளுக்கு கலெக்டர் அறிவுறுத்தல் appeared first on Dinakaran.