பரமக்குடியில் இமானுவேல் சேகரன் குருபூஜை: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அரசியல் கட்சி தலைவர்கள் மரியாதை

பரமக்குடி: இமானுவேல் சேகரன் குருபூஜையையொட்டி நினைவிடத்தில் திமுக சார்பில் அமைச்சர் உயதநிதி ஸ்டாலின் மற்றும் அதிமுக, காங், பாஜ உள்ளிட்ட பல்வேறு கட்சியினர், சமுதாய அமைப்பினர் மரியாதை செலுத்தினர். ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் ஒவ்வொரு ஆண்டும் செப்.11ம் தேதி தியாகி இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் குருபூஜை நடைபெறும். நேற்று இமானுவேல் சேகரன் 67வது குருபூஜையையொட்டி, அவரது நினைவிடத்தில் திமுக சார்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மரியாதை செலுத்தினர். அவருடன் அமைச்சர்கள் ராஜா கண்ணப்பன், பி.மூர்த்தி, பெரியகருப்பன், கயல்விழி செல்வராஜ், டெல்லி பிரதிநிதி ஏகே விஜயன், மாவட்டச் செயலாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் எம்எல்ஏ, பரமக்குடி எம்எல்ஏ முருகேசன், எம்பி நவாஸ் கனி உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.

அதிமுக சார்பாக முன்னாள் அமைச்சர் ஆர்பி.உதயகுமார் தலைமையில் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் உள்ளிட்டோர், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், எம்பி தர்மர், காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், மதிமுக சார்பாக வாசுதேவநல்லூர் எம்எல்ஏ சதன் திருமலை குமார், மதுரை புதூர் பூமிநாதன் உள்ளிட்டோர், விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக மாவட்ட செயலாளர் பிரபாகரன் தலைமையில் எம்எல்ஏ பாலாஜி உள்ளிட்டோர்,புதிய தமிழகம் கட்சி சார்பாக நிறுவன தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் சார்பாக நிறுவனத்தலைவர் ஜான் பாண்டியன், தேமுதிக சார்பில் விஜய பிரபாகரன், பாஜ சார்பில் தேசிய பொதுக்குழு உறுப்பினர் புரட்சி தாசன், மக்கள் விடுதலை கட்சி நிறுவன தலைவர் முன்னாள் எம்எல்ஏ முருகவேல் ராஜன் ஆகியோர் மரியாதை செலுத்தினர்.

 

The post பரமக்குடியில் இமானுவேல் சேகரன் குருபூஜை: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அரசியல் கட்சி தலைவர்கள் மரியாதை appeared first on Dinakaran.

Related Stories: