உரிமம் இல்லாமல் நடத்திய பழைய இரும்பு கடைக்கு சீல்: அதிகாரிகள் அதிரடி

 

பெரம்பூர், செப்.11: திரு.வி.க. நகர் மண்டலத்துக்கு உட்பட்ட பெரம்பூர் ராகவன் தெருவில் பழைய இரும்பு மற்றும் பேப்பர் கடை உள்ளது. இதன் உரிமையாளர் மைக்கேல் ராஜ். அப்பகுதியில் பள்ளிகள் மற்றும் கடைகள் அதிக அளவில் உள்ளதால் குறிப்பிட்ட அந்த கடையால் இடையூறு ஏற்படுவதாக அவ்வப்போது தொடர்ந்து மாநகராட்சி அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தன.

இதையடுத்து, திரு.வி.க. நகர் மண்டல அதிகாரி முருகன் தலைமையில் அதிகாரிகள் உரிய விசாரணை நடத்த அறிவுறுத்தினர்.  அதன்படி, நேற்று காலை உதவி செயற்பொறியாளர் ரவிவர்மன், உதவி வருவாய் அலுவலர் சுரேஷ்குமார், இளநிலை பொறியாளர் நாகராஜன் தலைமையிலான குழுவினர் சம்பவ இடத்திற்கு சென்று குறிப்பிட்ட அந்த இரண்டு பேப்பர் கடை மற்றும் இரும்பு கடையை சோதனை செய்தனர்.

அந்த இரண்டு கடைகளும் உரிய அங்கீகாரம் இல்லாமல் பொதுமக்களுக்கு இடையூற ஏற்படுத்தும் விதமாக செயல்பட்டு வந்தது தெரிய வந்தது. இதை தொடர்ந்து, அந்த 2 கடைகளையும் மாநகராட்சி அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர். மேலும் உரிமம் இல்லாமல் பொதுமக்களுக்கு இடையூறாக கடை நடத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

The post உரிமம் இல்லாமல் நடத்திய பழைய இரும்பு கடைக்கு சீல்: அதிகாரிகள் அதிரடி appeared first on Dinakaran.

Related Stories: