கேர்மாளம் அருகே அரசு பஸ்கள் நேருக்குநேர் மோதி விபத்து: பயணிகள் தப்பினர்


சத்தியமங்கலம்: கேர்மாளம் பகுதியில் இரண்டு அரசு பஸ்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் பயணிகள் காயம் இன்றி உயிர் தப்பினர். ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தில் இருந்து கடம்பூர் மலைப்பகுதி வழியாக கேர்மாளம் செக் போஸ்ட் வரை அரசு பஸ் இயக்கப்படுகிறது. அடர் வனப்பகுதி வழியாக அமைந்துள்ள இச்சாலையில் குறுகலான வளைவுகள் அதிகம் உள்ளது. நேற்று மாலை கேர்மாளம் செக்போஸ்ட் பகுதியில் இருந்து 30க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிய அரசு பஸ் கடம்பூர் நோக்கி சென்று கொண்டிருந்தது.

அப்போது கடம்பூரில் இருந்து பயணிகளை ஏற்றிய மற்றொரு அரசு பஸ் கேர்மாளம் செக்போஸ்ட் செல்வதற்காக வைத்தியநாதபுரம் புது தொட்டி அருகே வந்தபோது வளைவில் 2 பஸ்களும் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் இரண்டு அரசு பஸ்களிலும் பயணித்த பயணிகள் அதிர்ஷ்டவசமாக காயம் இன்றி உயிர் தப்பினர். இதற்கிடையே விபத்து காரணமாக ஒரு அரசு பஸ்ஸின் முன்பக்க கண்ணாடி முழுவதும் உடைந்து சேதமடைந்தது. இந்த விபத்து குறித்து கடம்பூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post கேர்மாளம் அருகே அரசு பஸ்கள் நேருக்குநேர் மோதி விபத்து: பயணிகள் தப்பினர் appeared first on Dinakaran.

Related Stories: