சாத்தான்குளம், செப். 10: சாத்தான்குளம் அருகே உள்ள பெரியதாழை மேலத்தெருவை சேர்ந்தவர் அண்டனி நிஜய் மனைவி அஷிபா (30). இவர், சாத்தான்குளம் தாலுகா அலுவலகத்தில் இளநிலை பொறியாளராக வேலைபார்த்து வருகிறார். தற்போது சாத்தான்குளம் தெற்கு ரத வீதியில் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் மதியம் இவரது ஒன்றே கால் வயது குழந்தை கிறிஸ் எய்டன் வீட்டின் முற்றத்தில் விளையாடி கொண்டிருந்தான்.
அப்போது தண்ணீருடன் இருந்த வாளிக்குள் தவறி விழுந்ததாக கூறப்படுகிறது.இதையடுத்து மயங்கிய நிலையில் காணப்பட்ட குழந்தையை பார்த்த அஷிபா, குழந்தையை மீட்டு சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தார். அங்கு சிகிச்சை பலனின்றி குழந்தை உயிரிழந்தான். இதுகுறித்து அஷிபா அளித்த புகாரின் பேரில் சாத்தான் குளம் எஸ்ஐ சுரேஷ்குமார் வழக்கு பதிந்தார். இன்ஸ்பெக்டர் ஏசுராஜசேகரன் விசாரணை நடத்தி வருகிறார்.
The post சாத்தான்குளத்தில் தண்ணீர் வாளிக்குள் தவறி விழுந்த குழந்தை உயிரிழப்பு appeared first on Dinakaran.