சென்னை: அமெரிக்காவில் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கிடைத்த வரவேற்பு மகிழ்ச்சி அளிக்கிறது என்று நடிகர் விஜய் சேதுபதி கூறியுள்ளார். முதலீடுகளை ஈர்ப்பதற்காக அமெரிக்கா சென்றுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், சிகாகோ நகரில் அமெரிக்க வாழ் தமிழர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்றார். பட்டு வேட்டி, பட்டு சட்டை அணிந்து விழாவில் பங்கேற்ற முதலமைச்சருக்கு அமெரிக்க வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அங்கு பேசிய முதல்வர், ‘‘தமிழர்கள் எங்கு பாதிக்கப்பட்டாலும், தாய்வீடு தமிழ்நாடு இருக்கிறது என்ற நிலையை உருவாக்கியுள்ளோம்’’ என்றார்.
மு.க.ஸ்டாலினின் இந்த பேச்சு அமெரிக்க வாழ் தமிழர்களிடையே பலத்த வரவேற்பை பெற்றது. இதுதொடர்பான புகைப்படத்தை தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட நடிகர் விஜய் சேதுபதி, ‘அமெரிக்காவிலுள்ள தமிழர்களிடையே நமது முதல்வருக்கு கிடைத்த வரவேற்பு மகிழ்ச்சி அளிக்கிறது’ என பதிவிட்டுள்ளார். அவர் வெளியிட்ட புகைப்படத்தில், மேடையில் மு.க.ஸ்டாலின் கையசைக்க, தமிழர்கள் ஆர்ப்பரித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் காட்சி இடம்பெற்றுள்ளது.
The post முதல்வருக்கு அமெரிக்காவில் வரவேற்பு : நடிகர் விஜய் சேதுபதி நெகிழ்ச்சி appeared first on Dinakaran.