தொண்டியில் விதைப்பு பணி தீவிரம்

தொண்டி, செப். 7: ராமநாதபுரம் மாவட்டத்தின் நெற்களஞ்சியம் என திருவாடானை அழைக்கப்படுகிறது. சுமார் 20 ஆயிரம் ஹெக்டேர் அளவில் நெல் விவசாயம் நடக்கிறது. தற்போது விதைப்பு காலம் தொடங்கி விட்ட நிலையில், தொண்டி சுற்று வட்டார பகுதிகளில் விவசாயிகள் நெல் விதைப்பு பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றனர். முன்னதாக வரப்புகளில் உள்ள களையை அழித்த பிறகு விதைப்பை தொடங்குகின்றனர்.தற்போது 25 கிலோ மூட்டை டீலக்ஸ் ரக நெல் 1300 முதல் 1400 வரை விற்கப்படுவதாக தெரிவிக்கின்றனர். கடந்த ஆண்டு 1180க்கு விற்கப்பட்ட நெல் இந்த முறை 150 ரூபாய் முதல் 200 ரூபாய் கூடுதலாக விற்கப்படுவதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

The post தொண்டியில் விதைப்பு பணி தீவிரம் appeared first on Dinakaran.

Related Stories: