புரசைவாக்கத்தில் உள்ள கழிவுநீர் இறைக்கும் நிலையம் 2 நாட்கள் செயல்படாது: குடிநீர் வாரியம் தகவல்

சென்னை, செப்.4: பராமரிப்பு பணி காரணமாக புரசைவாக்கம் கழிவு நீரிறைக்கும் நிலையம் இன்றும், நாளையும் செயல்படாது என சென்னை குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்னை மாநகராட்சி சார்பில் கணேசபுரம் வியாசர்பாடி ஜீவா ரயில் நிலைய சுரங்கப்பாதை மேம்பால கட்டுமான பணி நடைபெறுவதால், டாக்டர் அம்பேத்கர் கல்லூரி சாலையில் உள்ள 1000 மி.மீ விட்டமுள்ள கழிவுநீர் உந்து குழாயில் வால்வு பொருத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதற்காக, இன்று மாலை 6 மணி முதல் நாளை மாலை 6 மணி வரை (24 மணி நேரம்) மண்டலம் 6க்குட்பட்ட புரசைவாக்கம் கழிவு நீரிறைக்கும் நிலையம் செயல்படாது.

எனவே, ராயபுரம், திரு.வி.க நகர், அண்ணாநகர், தேனாம்பேட்டை மண்டலங்களுக்குட்பட்ட கீழ்கண்ட இடங்களில் உள்ள இயந்திர நுழைவாயில்களில் கழிவுநீர் நிரம்பி வெளியேறும் நிலை எற்பட்டால் அவசரத் தேவைகளுக்காக கழிவுநீர் உறிஞ்சும் இயந்திரங்கள் மூலம் கழிவுநீரை வெளியேற்ற கீழ்க்காணும் பகுதி அலுவலர்களை தொடர்பு கொள்ளவும். லாங்ஸ் கார்டன், நேப்பியர் பூங்கா, வால்டாக்ஸ் சாலை ஆகிய பகுதிகளுக்கு ராயபுரம் துணை பகுதி பொறியாளரை 8144930905, 8144930255 என்ற எண்களிலும், அயனாவரம், ஏகாங்கிபுரம், பெரம்பூர், செம்பியம் ஆகிய பகுதிகளுக்கு திரு.வி.க நகர் துணை பகுதிப் பொறியாளரை 8144930906, 8144930216, 8144930217 என்ற எண்களிலும், சேத்துபட்டு, சாஸ்திரி நகர், கீழ்ப்பாக்கம், சுந்தரம் தெரு, ஷெனாய் நகர், ஓசான்குளம் ஆகிய பகுதிகளுக்கு அண்ணா நகர் துணை பகுதிப் பொறியாளரை 8144930908, 8144930258 என்ற எண்களிலும், கிரீம்ஸ் சாலை பகுதிக்கு தேனாம்பேட்டை துணை பகுதிப் பொறியாளரை 8144930909, 8144930111 என்ற எண்களிலும் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post புரசைவாக்கத்தில் உள்ள கழிவுநீர் இறைக்கும் நிலையம் 2 நாட்கள் செயல்படாது: குடிநீர் வாரியம் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: