ராமநாதபுரம்,செப்.1:ராமநாதபுரம் மாவட்டத்தில் புதிய இல்லம் தேடி கல்வி மையங்கள் அமைக்கப்படுவதையொட்டி தன்னார்வலர்களுக்கான தேர்வு நடைபெற்றது. மாவட்டத்தில் இல்லம் தேடிக் கல்வி 2.O திட்டத்தின் கீழ் புதிய வாழ்விடங்களில் மாவட்ட அளவில் 33 பேர் புதிய தன்னார்வலர்களாக தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு நேற்று உயர் தொழில் நுட்ப ஆய்வகங்களில் இணைய வழியாக தேர்வு நடைபெற்றது. ராமநாதபுரம் நகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இணையவழித் தேர்வு நடைபெற்றது. இதுபோன்று போகலூர் திருப்புல்லாணி, நயினார்கோயில், பரமக்குடி, கமுதி மற்றும் கடலாடி ஆகிய ஒன்றியங்களிலும் இணைய வழித்தேர்வு நடைபெற்றது. இதில் தேர்ந்தெடுக்கப்பட்ட தன்னார்வலர்கள் 33 பேர் கலந்து கொண்டனர். தேர்வில் வெற்றி பெற்றவர்கள் புதிய மையங்களில் தன்னார்வலர்களாக செயல்பட உள்ளனர். மாவட்டம் முழுவதும் தேர்வுக்கான ஏற்பாடுகளை உதவித் திட்ட அலுவலர் செல்வராஜ், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வேல்சாமி, மாவட்ட ஆசிரிய ஒருங்கிணைப்பாளர் லியோன் செய்திருந்தனர்.
The post இல்லம் தேடிக் கல்வி மையங்கள் அமைப்பு appeared first on Dinakaran.