கடையம் அருகே பள்ளி வளாகத்தில் அட்டகாசம் செய்த ஒற்றை குரங்கு வனத்துறை கூண்டில் சிக்கியது

கடையம், டிச.18: கடையம் அருகேயுள்ள மேட்டூரில் டிடிடிஏ தொடக்கப்பள்ளி உள்ளது. இப்பள்ளி வளாகத்தில் கடந்த சில தினங்களாக வனத்தில் இருந்து தப்பி வந்த குரங்கு ஒன்று மாணவர்களின் தின்பண்டங்களை பறிப்பதும், அவர்கள் மேல் பாய்வதுமாக அச்சுறுத்தி வந்தது. மேலும் வீடுகளில் புகுந்து பொருட்களை சேதப்படுத்தியும் அட்டகாசம் செய்து வந்தது. இது குறித்து வனத்துறையினருக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். இதைதொடர்ந்து வனத்துறையினர் கண்காணித்து வந்த நிலையில் நேற்று காலை பள்ளி வளாகத்தில் அட்டகாசம் செய்த குரங்கை பிடிக்க கூண்டு வைத்தனர். இந்நிலையில் மாலையில் குரங்கு கூண்டுக்குள் சிக்கியது. தகவலறிந்த கடையம் வனத்துறையினர் குரங்கை அடர்வணப் பகுதிக்குள் கொண்டு பத்திரமாக விட்டனர். இந்நிலையில் கடந்த 15 நாட்களாக அட்டகாசம் செய்து வந்த குரங்கு பிடிபட்டதால் பள்ளி மாணவர்கள் நிம்மதி அடைந்தனர்.

Related Stories: