நெல்லை, செப்.1: தென்காசி தெற்கு மாவட்ட திமுக வர்த்தக அணி அமைப்பாளர் முத்துக்குமாரின் தந்தை மாயாண்டி வயது முதிர்வின் காரணமாக கடந்த 28ம் தேதி காலமானார். தகவல் தெரிந்த மாநில வர்த்தக அணி செயலாளர் கவிஞர் காசி முத்துமாணிக்கம், தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர் ஜெயபாலனுடன் முத்துக்குமார் இல்லத்திற்கு நேரில் சென்று அவரின் தந்தை படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். நிகழ்ச்சியில் சுரண்டை நகர செயலாளர் கணேசன், துணைச்செயலாளர் பூல் பாண்டியன், மாவட்ட ஆதித்திராவிடர் நலக்குழு தலைவர் சங்கர நயினார், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் ஜேகே ரமேஷ், மாவட்ட பிரதிநிதி பொன்சீலன், மாவட்ட மீனவர் அணி அமைப்பாளர் ஜேம்ஸ், தென்காசி வடக்கு மாவட்ட வர்த்தர் அமைப்பாளர் சரவணகுமார் அணித்தலைவர் ஜோதிராஜ், மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் வெள்ளைச்சாமி, வர்த்தகர் அணி துணை அமைப்பாளர்கள் சுப்பையா பாண்டியன், சிற்றரசு, கலை இலக்கிய பேரவை எம்எஸ்எல் பிரேம்குமார், பாண்டியாபுரம் கிளை செயலாளர் ஐயப்பன், சுரண்டை நகர வார்டு செயலாளர்கள் அருணா மோகன், பாண்டியபுரம் கொடி கோபாலகிருஷ்ணன் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
The post தென்காசி தெற்கு மாவட்ட திமுக வர்த்தக அணி அமைப்பாளரின் தந்தை படத்துக்கு மாநில நிர்வாகி மரியாதை appeared first on Dinakaran.