கமலின் மற்றொரு மல்டி ஸ்டார் படம்

கமல்ஹாசன் நடிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் ஒரு திரைப்படம் உருவாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் கமல்ஹாசன் காட்சிகளை ஒரே மாதத்தில் முடிக்க வினோத் திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. அஜித் நடித்த ‘நேர் கொண்ட பார்வை’, ‘வலிமை’ மற்றும் ‘துணிவு’ ஆகிய படங்களை இயக்கிய எச்.வினோத், கமல்ஹாசன் நடிக்கும் அடுத்த படத்தை இயக்க இருப்பதாகவும் இந்த படத்திற்கான ஆரம்ப கட்ட பணிகளையும் விரைவில் தொடங்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த படத்தை முடித்துவிட்டு கமல்ஹாசன், மணிரத்னம் இயக்கும் படத்திற்கு செல்ல இருப்பதாகவும், அதனால் கமல்ஹாசன் சம்பந்தப்பட்ட காட்சிகளை ஒரே ஒரு மாதத்தில் முடிக்க திட்டமிட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தில் விஜய் சேதுபதி உட்பட பல பிரபலங்கள் நடிக்க இருப்பதாகவும் இதுவும் ‘விக்ரம்’ போலவே ஒரு மல்டிஸ்டார் படம் என்றும் கூறப்படுகிறது.

The post கமலின் மற்றொரு மல்டி ஸ்டார் படம் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Related Stories: