தேனி: தேனியில் உள்ள மாவட்ட விளையாட்டு மைதான வளாகத்தில் உள்ள ஹாக்கி மைதானத்தில் தேசிய விளையாட்டு தினத்தையொட்டி நேற்று மாவட்ட அளவிலான பள்ளிகளுக்கிடையேயான ஹாக்கி போட்டி நடந்தது. இப்போட்டிகளை தேனி-அல்லிநகரம் நகர்மன்றத் தலைவர் ரேணுப்பிரியாபாலமுருகன், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் குபேந்திரன், தேனி நகர்மன்ற துணைத் தலைவர் செல்வம் துவக்கி வைத்தனர். மாணவ, மாணவிகளுக்கான போட்டியில் 9 அணிகள் கலந்து கொண்டன. இதில் வெற்றி பெற்று முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவ, மாணவியர் அணிகளுக்கு தேனி மாவட்ட போலீஸ் ஏடிஎஸ்பி சுகுமார், டாக்டர்.முத்துக்குமார், விளையாட்டு அலுவலர் டெரி ஆகியோர் பரிசுகளையும், கோப்பைகளையும் வழங்கினர்.
The post பள்ளி மாணவ, மாணவிகளுக்கான ஹாக்கி போட்டி appeared first on Dinakaran.