நாட்டு நலப்பணி திட்ட நிதியை உடனே விடுவிக்க வேண்டும் முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழகம் வலியுறுத்தல்

நாகர்கோவில், ஆக.27 : மூன்று வருடங்களுக்கும் மேலாக நிலுவையில் இருக்கும் நாட்டு நலப்பணித்திட்ட நிதியை பள்ளிகளுக்கு உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று தமிழ்நாடு முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழகம் வலியுறுத்தியுள்ளது. தமிழ்நாடு முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழக மாநில பொதுசெயலாளர் அன்பழகன், தமிழ்நாடு அரசின் முதன்மை செயலாளருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது: அரசு மற்றும் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளிகளில் செயல்பட்டு வரும் நாட்டு நலப் பணித் திட்டம் சிறப்பானதொரு கூடுதல் செயல்பாடாக தமிழக பள்ளி கல்வித் துறையால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஒவ்வொரு வருடமும் இதற்கான முகாம்கள் நடத்தப்பட்டு கிராமப்புறங்களிலும், தேவைப்படும் இடங்களிலும் நாட்டு நலப் பணி திட்டங்களை மாணவர்கள் சேவை மனப்பான்மையுடன் செய்து வருகின்றனர். இந்த முகாமிற்கான திட்ட ஒதுக்கீட்டு நிதி கடந்த 3 வருடங்களுக்கு மேலாக அளிக்கப்படவில்லை. இருந்தும் நாட்டு நலப் பணித்திட்ட அலுவலர்கள் தங்களது சொந்த செலவில் இத்திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தி வருகின்றனர். எனவே மேலும் தாமதிக்காமல் இதற்கான நிதியை உடனே விடுவிக்க வேண்டுகிறோம். இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

The post நாட்டு நலப்பணி திட்ட நிதியை உடனே விடுவிக்க வேண்டும் முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழகம் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: