சேரன்மகாதேவியில் வேளாண் பயிற்சி முகாம்

வீரவநல்லூர், ஆக.26: சேரன்மகாதேவியில் பங்களிப்பு உத்திரவாத திட்டத்தின் உயிர்மச் சான்றிதழ் நடைமுறைகள் குறித்த வேளாண் பயிற்சி முகாம் நடந்தது. சேரன்மகாதேவி வட்டார வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமையின் மாநில விரிவாக்க திட்டங்களின் உறுதுணை சீரமைப்புத் திட்டத்தின் கீழ் சேரன்மகாதேவி வட்டார ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையத்தில் பங்களிப்பு உத்திரவாத திட்டத்தின் உயிர்மச் சான்றிதழ் நடைமுறைகள் குறித்த விவசாயிகள் பயிற்சி முகாம் நடந்தது. முகாமிற்கு மாவட்ட வேளாண் இணை இயக்குநர் கிருஷ்ணகுமார் தலைமை வகித்தார். வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் உமாமகேஸ்வரி வரவேற்றார்.

முகாமில், அங்கக வேளாண் உற்பத்தி பொருட்களை சந்தை படுத்துதல் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சியளிக்கப்பட்டது. தொடர்ந்து முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு நொச்சி, ஆடாதொடா கன்றுகள் மற்றும் பி.ஜி.எஸ் உயிர்மச் சான்றிதழ் வழங்கப்பட்டது. நெல்லை மாவட்ட விதைச்சான்றிப்பு மற்றும் அங்கக சான்றளிப்புத்துறை உதவி இயக்குநர் கலைச்செல்வி உயிர்மச் சான்றிதழ் பெறுவதற்க்கான வழிமுறைகள் குறித்தும், விதைச்சான்றளிப்பு அலுவலர் நிவேதா அங்கக வேளாண்மை மற்றும் உயிர்மச்சான்றிதழ் பதிவு செய்வது குறித்தும், வட்டார தொழில்நுட்ப மேலாளர் சதிஷ்குமார் நுண்ணுயிர் கூட்டுக்கலவை பயன்படுத்துவது குறித்தும் பயிற்சி அளித்தனர் . வேளாண்மை அலுவலர் மணி நன்றி கூறினார். பயிற்சி ஏற்பாடுகளை உதவி தொழில்நுட்ப மேலாளர் கார்த்திகேயன் செய்திருந்தார்.

The post சேரன்மகாதேவியில் வேளாண் பயிற்சி முகாம் appeared first on Dinakaran.

Related Stories: