நடிகைகளுக்கு எதிரான பாலியல் புகார்களை விசாரிக்க ஐஜி தலைமையில் 7 ஐபிஎஸ் அதிகாரிகள் குழு

திருவனந்தபுரம்: நீதிபதி ஹேமா கமிட்டி அறிக்கையில் மலையாள திரையுலகில் பல நடிகைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் குறித்து பல்வேறு அதிர்ச்சியூட்டும் தகவல்கள் இடம்பெற்றிருந்தன. இந்த நிலையில் நடிகைகள் மீதான பாலியல் புகார்களை விசாரிக்க ஒரு ஐஜி தலைமையில் 7 ஐபிஎஸ் அதிகாரிகளைக் கொண்ட ஒரு குழுவை கேரள அரசு அதிரடியாக நியமித்து உத்தரவிட்டுள்ளது.

தென் மண்டல ஐஜி ஸ்பர்ஜன் குமார் தலைமையில் திருவனந்தபுரம் சரக டிஐஜி அஜிதா பேகம், குற்றப்பிரிவு எஸ்பி மெரின் ஜோசப், கடலோர காவல் படை உதவி ஐஜி பூங்குழலி, கேரள போலீஸ் அகாடமி உதவி இயக்குனர் ஐஸ்வர்யா டோங்க்ரே, சட்டம், ஒழுங்கு உதவி ஐஜி அஜித் மற்றும் குற்றப்பிரிவு எஸ்பி மதுசூதனன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இதில் 4 பேர் பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் ஆவார். இந்த சிறப்பு படையின் விசாரணையில் நடிகைகள் மீதான பாலியல் அத்துமீறல்கள் தொடர்பாக மேலும் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

The post நடிகைகளுக்கு எதிரான பாலியல் புகார்களை விசாரிக்க ஐஜி தலைமையில் 7 ஐபிஎஸ் அதிகாரிகள் குழு appeared first on Dinakaran.

Related Stories: