புதுச்சேரி, ஆக. 24: புதுச்சேரி வில்லியனூர் அரும்பார்த்தபுரம் பகுதியை சேர்ந்தவர் தனசெல்வி (40). இவர் காரைக்காலை சேர்ந்த பால்சாமி மகன் முத்துகுமார் என்பவரை காதலித்து கடந்த 2008ம் ஆண்டு திருமணம் செய்து ெகாண்டார். இவர்களுக்கு 13 வயதில் பெண் குழந்தை உள்ளது. இதனிடையில் கடந்த 2013ம் ஆண்டு தனசெல்விக்கு உடல்நிலை சரியில்லாததால் சிகிச்சைக்காக ஜிப்மரில் அனுமதிக்கப்பட்டார். அப்போது தனசெல்விக்கு கேன்சர் இருப்பது தெரியவந்தது. தொடர்ந்து தனசெல்வி கேன்சர் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதனால் அடிக்கடி தனசெல்வி மற்றும் முத்துகுமாருக்கு இடையே பிரச்ைன ஏற்பட்டு வந்துள்ளது. பின்னர் தனசெல்வி கடந்த 2018ம் ஆண்டு கேன்சர் சிகிச்சைக்காக ஜிப்மர் வந்தபோது, முதுகு தண்டு பகுதி நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற வேண்டும் என கூறியுள்ளனர். இதனால் தனசெல்வி 3 மாதம் ஜிப்மரில் சிகிச்சை பெற்று, அதன்பின்னர் காரைக்காலில் உள்ள மாமியார் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது எதிர்வீட்டில் உள்ள பெண்ணுடன் முத்துகுமாருக்கு தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து கேட்ட போது, இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. அப்போது வரதட்ணையாக ரூ.30 லட்சம் எடுத்து வருமாறு கூறி, முத்துகுமார் தனசெல்வியின் பெற்றோர் வீட்டுக்கு அனுப்பியதாக தெரிகிறது.
இதனிடையில் தனசெல்வியன் பெண் குழந்தைக்கு உணவு கொடுக்காமல் அடித்து துன்புறுத்தியதாக தெரிகிறது. இத்தகவல் அறிந்து தனசெல்வியின் உறவினர்கள் காரைக்கால் சென்று குழந்தையை அழைத்து கொண்டு புதுவைக்கு வந்தனர். அப்போது முத்துகுமார் 2வது திருமணம் செய்து, ஒரு பெண் குழந்தை இருப்பதாக தனசெல்விக்கு தெரியவந்தது. இதையடுத்து விவாகரத்து வாங்காமல், 2வது திருமணம் செய்த முத்துகுமார் மீது நடவடிக்கை எடுக்ககோரி, தனசெல்வி வில்லியனூர் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post முதல் மனைவிக்கு தெரியாமல் 2வது திருமணம் செய்த கணவர் மீது வழக்கு appeared first on Dinakaran.