ராமியணஅள்ளியில் நிலக்கடலை சாகுபடி பயிற்சி

அரூர், ஆக.22: மொரப்பூர் வேளாண்மை துறை சார்பில் ராமியணஅள்ளியில் நிலக்கடலை சாகுபடியில் இயந்திரமயமாக்கல் தொழில்நுட்பங்கள் குறித்து உள்மாவட்ட அளவிலான விவசாயிகள் பயிற்சி நடைபெற்றது. வேளாண் உதவி இயக்குனர் பழனிவேல் தலைமையில், துணை வேளாண் அலுவலர் செந்தில்குமார் வேளாண் துறையின் மானிய திட்டங்கள் மற்றும் மானாவாரி நிலக்கடலை குறித்த தொழில்நுட்பங்களும், நிலக்கடலை சாகுபடியில் பயன்படுத்தப்படும் இயந்திரங்கள், அதன் பயன்கள் குறித்தும் கூறினார். உதவி வேளாண்மை அலுவலர் அருள்குமார், வேளாண் துறை சார்ந்த மாநில திட்டங்கள் குறித்து கூறினார். வட்டார தொழில்நுட்ப மேலாளர் திருமால் நன்றி கூறினார். பயிற்சிக்கான ஏற்பாடுகளை வீரதளபதி செய்திருந்தார்.

The post ராமியணஅள்ளியில் நிலக்கடலை சாகுபடி பயிற்சி appeared first on Dinakaran.

Related Stories: