மபியில் பயணிகள் ரயில் தடம் புரண்டது

இடார்சி: மத்தியப் பிரதேச மாநிலம் ஹோஷங்காபாத் மாவட்டத்தில் உள்ள இடார்சி ரயில் நிலையத்திற்குள் நுழையவிருந்த ராணி கம்லாபதி-சஹர்சா சிறப்பு பயணிகள் ரயிலின் இரண்டு பெட்டிகள் தடம் நேற்று மாலை 6.10 மணி அளவில் தடம் புரண்டன. இந்த ரயில் நடைமேடை எண் 2 க்குள் நுழையவிருந்தபோது அதன் இரண்டு பெட்டிகளும் தடம் புரண்டன. தடம் புரண்ட போது 5 கி.மீட்டர் வேகத்தில் ரயில் இயங்கியதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இந்த விபத்தில் யாருக்கும் காயம் இல்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது. இருப்பினும் அங்கு பல மணி நேரம் ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்ட தகவல் வெளியாகி உள்ளது.

The post மபியில் பயணிகள் ரயில் தடம் புரண்டது appeared first on Dinakaran.

Related Stories: