பெண் டாக்டரின் ஹிஜாபை அகற்றியது தொடர்பாக பீகார் முதல்வர் நிதிஷ் குமார் மீது காவல்துறையில் சமாஜ்வாதி கட்சி புகார்

பாட்னா: பெண் மருத்துவரின் ஹிஜாபை வலுக்கட்டாயமாக அகற்றியது தொடர்பாக பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமாருக்கு எதிராக சமாஜ்வாதி கட்சியின் சார்பில் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. பீகார் மாநிலத்தில் உள்ள தலைமை செயலகத்தில் 1000 ஆயுஷ் மருத்துவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. இதில் முதல்வர் நிதிஷ்குமார் மற்றும் அமைச்சர்கள் கலந்து கொண்டு பணி நியமன ஆணையை வழங்கினார்கள். அப்போது 10 பேருக்கு நிதிஷ்குமார் கையால் நேரடியாக பணி நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டன.

அவரிடம் பெண் டாக்டர் நுஸ்ரத் பர்வீன் என்பவரும் பணி நியமன ஆணை பெற்றார். அவர் தன் முகத்தை ஹிஜாபால் மூடியபடி அரசு ஆணையை பெற்ற போது, முதல்வர் நிதிஷ்குமார் முகம் சுளித்து, ‘இது என்ன?’ என்று கேட்டபடி குனிந்து அவரது முகத்தின் இருந்த ஹிஜாபை அகற்ற இழுத்தார். இதனால் அந்த பெண் டாக்டர் பதற்றம் அடைந்தார். உடனே அங்கு இருந்த ஒரு அதிகாரி அவசரமாக டாக்டரை அழைத்துச் சென்றார். நி அருகில் நின்றுகொண்டிருந்த துணை முதல்வர் சாம்ராட் சவுத்ரி, நிதிஷ்குமாரின் சட்டையின் கையைப் பிடித்து இழுத்தார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது. காங்கிரஸ், ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து,’ இதுதான் முதல்வரின் தற்போதைய மனநிலை’ என்று விமர்சனம் செய்துள்ளன.

இந்த நிலையில் உத்தரப் பிரதேசத்திற்கு நிதிஷ் குமாருக்கு எதிராக புகார் அளிக்கப்பட்டுள்ளது. லக்னோவில் உள்ள கைஸர்பாக் காவல் நிலையத்திற்கு நேரில் சென்ற அக்கட்சியின் நிர்வாகி சுமையா ரானா நிதிஷ் குமார் மீது புகார் அளித்துள்ளார். அதே போல் உத்தரப் பிரதேச மாநில அமைச்சர் சஞ்சய் நிஷாத்திற்கு எதிராக காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. உத்தரப் பிரதேச அமைச்சரான சஞ்சய் நிஷாத், பீகார் முதல்வர் நிதிஷ் குமாரின் ஹிஜாப் சம்பவம் குறித்த தனது கருத்துக்களால் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார். பெண் வெறுப்பு குற்றச்சாட்டுக்கு ஆளான நிஷாத், பின்னர் தனது கருத்துக்களில் எந்தத் தீய நோக்கமும் இல்லை என்று கூறி விளக்கமளித்துள்ளார்.

Related Stories: