திருச்சி, ஆக.7: கட்டுமானம் மற்றும் மனைத்தொழில் கூட்டமைப்பு சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது. கட்டுமானம் மற்றும் மனைத்தொழில் கூட்டமைப்பு சார்பில் ஒன்றிய அரசுக்கு எதிரான கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் கலெக்டர் அலுவலம் அருகில் நேற்று நடைபெற்றது. மாநில இணைச்செயலாளர் தென்னரசு தலைமை வகித்தார். ஒன்றிய அரசின் நிதியை தமிழக கட்டுமானத் துறைக்கு கட்டாயம் ஒதுக்கீடு செய்ய வேண்டும். கட்டுமான துறைக்கு தனி அமைச்சகம் வேண்டும். கட்டுமான பொருட்களுக்கு விலை நிர்ணயம் செய்ய ஒழுங்குமுறை விற்பனை ஆணையம் அமைத்திட வேண்டும். கட்டுமான பொறியாளர்கள் வாழ்வாதாரம் காத்திட பொறியாளர் கவுன்சில் உடனடி தேவை. கட்டுமான பொருட்களின் ஜிஎஸ்டி வரியை 5 சதவிகிதமாக குறைத்திட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஒன்றிய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். நடந்தது. இதில் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
The post 18 தீர்மானங்கள் நிறைவேற்றம் ஒன்றிய அரசுக்கு எதிராக கட்டுமான கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.