விகேபுரம்,ஆக.6: காரையாறு சொரிமுத்து அய்யனார் கோயிலில் ஆடி அமாவாசை திருவிழாவுக்கு வந்த பக்தர்களுக்கு அம்பை யூனியன் சேர்மன் பரணி சேகர் துணி பை வழங்கினார். நெல்லை மாவட்டம் பாபநாசம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற காரையாறு சொரிமுத்து அய்யனார் ேகாயிலில் ஆடி அமாவாசை திருவிழா கோலாகலமாக நேற்று முன்தினம் நடந்தது. இதில் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி உட்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 1 லட்சம் பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
விழாவையொட்டி தமிழக அரசின் உத்தரவின் படி ரோட்டரி கிளப் சார்பில் ‘பிளாஸ்டிக்கை ஒழிப்போம் துணிப்பை பயன்படுத்துவோம்’ என்று பக்தர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் துணி பை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
இதில் அம்பை யூனியன் சேர்மன் பரணி சேகர் பங்கேற்கு கோயிலுக்கு வந்த பக்தர்களுக்கு துணி பை வழங்கினார். நிகழ்ச்சியில் மாவட்ட கவுன்சிலர் அருண் தவசுபாண்டியன், மாவட்ட திமுக துணை செயலாளர் மைக்கேல் மற்றும் ரோட்டரி கிளப் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
The post காரையாறு சொரிமுத்து அய்யனார் கோயிலில் பக்தர்களுக்கு துணி பை விநியோகம் appeared first on Dinakaran.