மானியத்தில் நெல் விதைகள் விநியோகம்

 

பரமக்குடி,ஆக.5: போகலூர் வட்டாரத்தில் உள்ள வேளாண்மை விரிவாக்க மையத்தில் குறுகிய காலத்தில் விளையக்கூடிய மிகவும் சன்னரகத்தைச் சேர்ந்த சான்று பெற்ற ஆர்.என்.ஆர் 15048 நெல் விதை 17 மெ.டன் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. அதிக மகசூல் மற்றும் சாயாத தன்மை கொண்ட 120- 125 நாட்களில் விளையக் கூடிய என்.எல்.ஆர் 34449 நெல் ரகம் 22 மெ.டன் இருப்பு வைக்கப்பட்டு விவசாயிகளுக்கு உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு இயக்கம் அரிசி, தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டம் நெல் மற்றும் விதை கிராமத்திட்டம் ஆகிய திட்டங்களில் மானியத்தில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

போகலூர் வட்டாரத்தில் கருங்குளம் பழனிச்சாமி, தெய்வேந்திர நல்லூர் ராஜேந்திரன் மற்றும் அரியகுடி புத்தூர் சண்முகம் ஆகிய விவசாயிகளுக்கு, நெல் சான்று விதைகளை மானியத்தில் வழங்கி நெல் விநியோகத்தை மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் கன்னையா தொடங்கி வைத்தார். நெல் விதைகளுடன் அசோஸ்பைரில்லம் நெல், பாஸ்போ பாக்டீரியா, பொட்டாஷ் திரவ உயிர் உரங்கள் மற்றும் நெல் நுண்ணூட்டச்சத்து மானியத்தில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

சிறுதானியங்கள் குதிரைவாலி எம்.டி.யு-1 மற்றும் உளுந்து ரகங்களான வம்பன்-8, வம்பன்-10,வம்பன்-11 ஆகிய சான்று விதைகள் உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு இயக்கம் பயறு திட்டத்தில் மானியத்தில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இதனை விவசாயிகள் போகலூர் வேளாண்மை விரிவாக்க மையத்தில் வாங்கி பயனடைய வேளாண்மை இணை இயக்குநர் கண்ணையா கேட்டுக்கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் வேளாண்மை உதவி இயக்குநர் நாகராஜன், போகலூர் வேளாண்மை உதவி இயக்குநர் ராஜேந்திரன், உதவி வேளாண்மை அலுவலர்கள் ஜெயசங்கர், கௌசல்யா, அட்மா திட்ட உதவி மேலாளர்கள் சந்திரகுரு, காயத்ரி ஆகியோர் கலந்து கொண்டனர்.

The post மானியத்தில் நெல் விதைகள் விநியோகம் appeared first on Dinakaran.

Related Stories: