மாதவரம் அருகே வடபெரும்பாக்கத்தில் அரசு சலுகைகள் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு

 

திருவொற்றியூர், ஆக. 5: மாதவரம் அருகே வடபெரும்பாக்கத்தில் அரசின் சலுகைகள் குறித்து பள்ளி மாணவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. மாதவரம் அருகே வடபெரும்பாக்கத்தில் உள்ள மாநகராட்சி ஆரம்ப பள்ளியில் 100க்கு மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்நிலையில், அரசின் சார்பில் வழங்கப்படும் சலுகைகள் குறித்து பள்ளி மாணவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

மாதவரம் வடக்கு பகுதி திமுக செயலாளர் புழல் எம்.நாராயணன் கலந்துகொண்டு பள்ளிக்கல்வியின் தரத்தை உயர்த்தவும், மாணவ, மாணவிகளின் எதிர்கால நலனுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் செய்து வரும் பல்வேறு நலத்திட்டங்கள், சலுகைகள் மற்றும் பயன்பெறு வழிமுறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

முன்னதாக பட்டியலின பழங்குடியினருக்கு வழங்கப்பட்ட 3 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்குவதில் தடை இல்லை என தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்ற தீர்ப்பை வரவேற்றும் இத்திட்டத்தைக் கொண்டு வந்த மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதிக்கு நன்றி தெரிவித்தும் அவரது திருவுருவப் படத்திற்கு மலர்கள் தூவி மாணவ, மாணவிகள் பாடல் பாடி அஞ்சலி செலுத்தினர். அதனைத் தொடர்ந்து, மாணவர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், நிர்வாகிகள் கருணாகரன், பாலாஜி, மூர்த்தி, சண்முகபிரியன், சிவகுமார், வினோத், பகுதி இளைஞரணி துணை அமைப்பாளர் எம்.என்.அஜய் தென்னவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

The post மாதவரம் அருகே வடபெரும்பாக்கத்தில் அரசு சலுகைகள் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு appeared first on Dinakaran.

Related Stories: