கோவில்பட்டி கோயிலில் ஆடி கொடை விழா

கோவில்பட்டி, ஆக. 4: கோவில்பட்டி நடராஜபுரம் தெருவில் அருள்பாலிக்கும்  சிவசக்தி பத்திரகாளியம்மன் கோயில், மலையாளத்து சுடலை மகாராஜா கோயில் ஆடி கொடை விழா மற்றும் பூக்குழி திருவிழா கடந்த 1ம்தேதி துவங்கியது. இதையொட்டி சாமக்கொடை மற்றும் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நேற்று அதிகாலை நடந்தது. ஆலய பூசாரியான சங்கர், சிறப்பு பூஜைகள் நடத்தியதோடு சுடலை மகாராஜா சுவாமிக்கு உணவூட்டும் நிகழ்ச்சி நடந்தது. பிறகு அவர் குழந்தைகளை கையில் ஏந்தியவாறு மேளத்தாளம் முழங்க பூக்குழி இறங்கினார். இதைத்தொடர்ந்து விழாவில் பங்கேற்ற பக்தர்களுக்கு அருள்வாக்கு கூறினார். அப்போது அவர் ‘‘ ‘தர்மம் அழிந்து அநீதி அதிகரித்த காரணத்தால் வயநாடு நிலச்சரிவு போன்ற இயற்கை சீற்றங்கள் நடந்துவருகின்றன. அந்த இயற்கை சீற்றங்கள் தமிழகத்தை நோக்கியும் வருகிறது. மக்களின் சுயநலம்தான் இதற்கு காரணம்’’ என்றார். விழாவில் பக்தர்கள் திரளானோர் பங்கேற்றனர்.

The post கோவில்பட்டி கோயிலில் ஆடி கொடை விழா appeared first on Dinakaran.

Related Stories: