நெல்லை- சென்னை வந்தே பாரத்துக்கு திருச்செந்தூரில் இருந்து இணைப்பு ரயில் நாசரேத் வியாபாரிகள் சங்கம் வலியுறுத்தல்

நாசரேத், ஆக. 2: நெல்லை- சென்னை வந்தே பாரத் ரயிலில் செல்வதற்கு வசதியாக திருச்செந்தூரில் இருந்து இணைப்பு ரயில் இயக்க வேண்டுமன நாசரேத் நகர வியாபாரிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. நாசரேத் நகர வியாபாரிகள் சங்க 48வது ஆண்டு விழா நடந்தது. சங்க தலைவர் எட்வர்ட் கண்ணப்பா தலைமை வகித்தார். துணை தலைவர் ஞானையா வரவேற்றார். சங்க பொதுச்செயலாளர் அசுபதிசந்திரன் ஆண்டறிக்கை சமர்ப்பித்தார். பொருளாளர் ஜெயக்குமார் தணிக்கை அறிக்கை வாசித்தார். போலீஸ் எஸ்ஐ வைகுண்டதாஸ் வாழ்த்தி பேசினார். கூட்டத்தில் நெல்லை- சென் னை வந்தே பாரத் ரயிலில் செல்வதற்கு வசதியாக திருச்செந்தூரில் இருந்து இணைப்பு ரயில் இயக்க வேண்டும். அரசு அறிவித்துள்ள நியோ டைடல் பார்க்கை மூடப்பட்டு கிடக்கும் நாசரேத் கூட்டுறவு நூற்பாலை இடத்தில் அமைக்க வேண்டும். நாசரேத்தை தனி தாலுகாவாக்க வேண்டும். நாசரேத்தில் புதிதாக அரசு மருத்துவமனை அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் சங்க நிர்வாகக்குழு உறுப்பினர்கள், வியாபாரிகள் கலந்து கொண்டனர். சங்க இணை செயலாளர் புருஷோத்தமன் நன்றி கூறினார்.

The post நெல்லை- சென்னை வந்தே பாரத்துக்கு திருச்செந்தூரில் இருந்து இணைப்பு ரயில் நாசரேத் வியாபாரிகள் சங்கம் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: