அருப்புக்கோட்டை, ஆக.2: அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 32 கிராம ஊராட்சிகளை சேர்ந்த 75 பயனாளிகளுக்கு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் ரூ.3.50 லட்சம் மதிப்பீட்டில் வீடு கட்ட அனுமதி ஆணையினையும், காலனி வீடுகள் பராமரிப்பு வேலை செய்வதற்கான உத்தரவினை 277 பேருக்கும் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் வழங்கினார்.
நிகழ்ச்சியில் ஒன்றிய சேர்மன் சசிகலா பொன்ராஜ், ஒன்றியக்குழு துணை தலைவர் உதயசூரியன், வட்டார வளர்ச்சி அலுவலர் சீனிவாசன், தாசில்தார் செந்தில்வேல், அலுவலக மேலாளர் துரைக்கண்ணன், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் செந்தில்ராணி, முன்னாள் ஒன்றிய சேர்மன் சுப்பாராஜ், ஒன்றிய செயலாளர் பாலகணேசன், பொதுக்குழு உறுப்பினர் கொப்பையராஜ், மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை அமைப்பாளர் பாளையம்பட்டி வேலுச்சாமி, மாவட்ட கவுன்சிலர் பாலசந்தர், நகர திமுக செயலாளர் ஏ.கே.மணி, ஒன்றிய கவுன்சிலர்கள் கோவிந்தசாமிநாதன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
The post கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் வீடு கட்ட அனுமதி ஆணை: அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் வழங்கினார் appeared first on Dinakaran.