கொத்தமங்கலம் பிடாரி அம்மனுக்கு பாளையெடுப்பு விழா

புதுக்கோட்டை, ஆக. 1: புதுக்கோட்டை மாவட்டம் கொத்தமங்கலம் பிடாரி அம்மனுக்கு பாலிகை எடுப்பு விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. மாதம் மும்மாரி மழை பெய்து விவசாயம் செழித்து வளரவும் மக்கள் நோய் நொடியின்றி வாழ வேண்டும் எனவும் ஆண்டு தோறும் பாலிகை எடுப்பு மற்றும் மது எடுப்பு எனப்படும் பாளையெடுப்பு விழா ஆகியவை ஆண்டு தோறும் ஆடி மாதத்தில் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் கடந்த வாரம் ஊர் மக்களால் தங்களது வீடுகளில் பெண்கள் விரதமிருந்து 9 நவ தாணிய விதைகளை பூஜை வீட்டில் உள்ள பூஜை அறையில் குவளை சட்டிகளில் விதைகளை விதைத்து அவை ஓரளவு நன்கு வளர்ந்த நிலையில் நேற்றைய தினம் நேரத்தில் ஒவ்வொரு குடியிருப்பு வாரியாக பெண்கள் தலையில் முளைப்பாரியை சுமந்தபடி கும்மியடித்து குலவை பாடியபடி கொத்தமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் அருகே மணலடிகொட்டல் அருகே ஒன்று சேர்ந்து ஊர் எல்லையில் உள்ள பிடாரி அம்மன் கோவிலுக்கு சென்று கோவிலை மூன்று முறை வலம் வந்து கோவில் முன்பாக உள்ள குளத்தில் முளைப்பாரியை கொட்டி தண்ணீரில் கரைத்து பிடாரி அம்மனை வழிபட்டனர்.

The post கொத்தமங்கலம் பிடாரி அம்மனுக்கு பாளையெடுப்பு விழா appeared first on Dinakaran.

Related Stories: