மாநில வலுதூக்கும் போட்டி கோவில்பட்டி வீரர்கள் தங்கம் வென்று சாதனை

கோவில்பட்டி, ஆக. 1: சேலத்தில் 2024-25ம் ஆண்டுக்கான மாநில வலுதூக்கும் போட்டி, இரு நாட்கள் நடைபெற்றது. 100க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்ற இப்போட்டியில் கோவில்பட்டியை சேர்ந்த வீரர்கள் மங்கள்ராஜ், சுபாஷ், சண்முகராஜ், புஷ்பராஜ், சுதன் அபிஷேக், கார்த்திக், ரவி பாரூக் ஆகியோர் கலந்து கொண்டு விளையாடினர். வீரர்கள் மங்கள்ராஜ், சுபாஷ், புஷ்பராஜ் ஆகியோர் தங்கப்பதக்கமும், சண்முகராஜ், சுதன் அபிஷேக், கார்த்திக், ரவி பாரூக் ஆகியோர் வெண்கல பதக்கமும் வென்றனர். வெற்றி பெற்று சாதனை படைத்த வீரர்களை கோவில்பட்டியை சேர்ந்த பல்வேறு அமைப்பினர், அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் பாராட்டினர்.

The post மாநில வலுதூக்கும் போட்டி கோவில்பட்டி வீரர்கள் தங்கம் வென்று சாதனை appeared first on Dinakaran.

Related Stories: