லக்னோ: மக்களவையில் நேற்று முன்தினம் பேசிய பாஜ எம்பி அனுராக் தாக்கூர், ‘‘தன்னுடைய சாதியே என்னவென்று தெரியாதவர்கள் சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து பேசுகின்றனர்’’ என்று மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தியை மறைமுகமாக தாக்கினார். இதற்கு எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, ‘‘நீங்கள் எவ்வளவு வேண்டுமானாலும் என்னை அவமதியுங்கள். ஆனால் இதே அவையில் நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பிற்கான சட்டத்தை இயற்றுவேன்’’ என பதிலளித்தார். இந்த விவகாரம் சர்ச்சையை கிளப்பிய நிலையில், பிஎஸ்பி கட்சி தலைவர் மாயாவதி நேற்று டிவிட்டரில் பதிவிடுகையில், சாதி மற்றும் சாதி வாரி கணக்கெடுப்பு தொடர்பாக மக்களவையில் பாஜ, காங்கிரஸ் கட்சிகள் மோதி கொண்டது ஒரு நாடகம். இரண்டு கட்சிகளுமே ஓபிசிகளின் இடஒதுக்கீட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்த வரலாறு கொண்டவை. ஓபிசிகளின் இடஒதுக்கீட்டுக்கு வெளிப்படையாகவும் திரைமறைவிலும் அந்த கட்சிகள் தீவிரமாக எதிர்த்துள்ளன. இந்த விவகாரத்தில் அவர்களை நம்ப முடியாது என குறிப்பிட்டுள்ளார்.
The post பாஜ, காங். ஓபிசிகளுக்கு எதிரான கட்சிகள்: பிஎஸ்பி தலைவர் மாயாவதி சாடல் appeared first on Dinakaran.