சாமானியர்களுக்கு எதிரான 3 குற்றவியல் சட்டங்களை நீக்க வேண்டும்: துரை வைகோ பேச்சு

சென்னை: சமத்துவம், சமூக நீதி, சாமானியரின் உரிமைக் குரல், ஜனநாயகத்துக்கு எதிராக உள்ள ஒன்றிய அரசின் 3 புதிய குற்றவியல் சட்டங்களும் அகற்றப்பட வேண்டும் என்று துரை ைவகோ கூறினார். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர்கள் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழுவின் சார்பில் ஒன்றிய அரசின் 3 குற்றவியல் சட்டங்களை எதிர்த்து நேற்று டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடந்தது. இதில் மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ எம்பி கலந்து கொண்டார்.

அவர் பேசியதாவது: பழைய சட்டங்களை மாற்றி புதிய சட்டங்கள் இயற்றியதில் ஏமாற்றமும், குழப்பமும்தான் மிஞ்சுகிறது. இந்தியில் பெயர்களை மாற்றி இருக்கிறார்கள். இந்த சட்டங்களின் பெயர்களை நீதிபதிகளும், வழக்கறிஞர்களும், சட்ட வல்லுனர்களுமே உச்சரிப்பதற்கு சிரமப்படும்போது சாமானியர்களால் எப்படி புரிந்து கொள்ள முடியும். 3 புதிய சட்டங்களிலும் பழைய ஷரத்துக்களே 95 சதவிகிதம் உள்ளது. புதிய சட்டங்களில் காவல்துறைக்கு கூடுதல் அதிகாரங்களை வழங்கி இருக்கிறார்கள். இதனால் சாத்தான்குளம் காவல்நிலைய சம்பவம் போன்ற நிகழ்வுகளை இனி நாடு முழுவதும் எதிர்பார்க்க வேண்டியது வரும். சமத்துவத்திற்கும், சமூக நீதிக்கும், சாமானியர்களின் உரிமைக் குரலுக்கும், ஜனநாயகத்திற்கும் எதிராக உள்ள இந்த மூன்று புதிய குற்றவியல் சட்டங்களும் உடனே அகற்றப்பட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

The post சாமானியர்களுக்கு எதிரான 3 குற்றவியல் சட்டங்களை நீக்க வேண்டும்: துரை வைகோ பேச்சு appeared first on Dinakaran.

Related Stories: