2வது டி.20 போட்டியில் இந்தியா அபார வெற்றி; பேட்ஸ்மேன் கணிக்க முடியாத பந்தை வீசுவது மிகவும் பிடிக்கும்: ஆட்டநாயகன் ரவி பிஷ்னோய் பேட்டி

பல்லெகெலே: இந்தியா-இலங்கை கிரிக்கெட் அணிகள் இடையே 3 போட்டி கொண்ட டி.20 தொடர் பல்லெகெலே மைதானத்தில் நடந்து வருகிறது. இதில் முதல் போட்டியில் இந்தியா வென்ற நிலையில் 2வது போட்டி நேற்று நடந்தது. இதில் டாஸ் வென்ற இந்திய பவுலிங்கை தேர்வு செய்ய முதலில் பேட் செய்த இலங்கை 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 161 ரன் எடுத்தது. அதிகபட்சமாக குசால்பெரேரா 53 ரன் அடித்தார். இந்திய பவுலங்கில் ரவி பிஷ்னோய் 3, பாண்டியா, அக்சர், அர்ஷ்தீப் சிங் தலா 2 விக்கெட் எடுத்தனர். பின்னர் இந்திய அணி களம் இறங்கியதும் முதல் ஓவரிலேயே மழை குறுக்கிட்டது. சுமார் ஒரு மணி நேரம் ஆட்டம் தடைப்பட்ட நிலையில் பின்னர் இந்திய அணிக்கு 8 ஓவரில் 78 ரன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதில் ஜெய்ஸ்வால் 15 பந்தில் 30, கேப்டன் சூர்யகுமார் 12 பந்தில் 26, பாண்டியா 9 பந்தில் நாட் அவுட்டாக 22 ரன் விளாசினர்.

6.3 ஓவரில் 3 விக்கெட் இழந்து 81 ரன் எடுத்த இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்று 2-0 என தொடரை வென்றது. இந்த போட்டியில் ஆட்டநாயகன் விருதுபெற்ற ரவி பிஷ்னோய் கூறியதாவது: முதல் போட்டியில் பந்து ஸ்விங் ஆகவில்லை. ஆனால் இன்று பந்து நன்றாக திரும்பியது. மேலும் என்னுடைய பந்தில் வேகமும் அதிகமாக இருக்கும். நான் வேகமாக பந்துவீச முயற்சி செய்வேன், பேட்ஸ்மேன்கள் கணிக்க முடியாத பந்தை வீசுவது எனக்கு மிகவும் பிடிக்கும். இறுதிக்கட்ட ஓவர்களில் பந்து வீச நிர்வாகம் என்னை அழைக்கிறது என்றால் என் மீது கம்பீர் நம்பிக்கை வைத்திருக்கிறார் என்று அர்த்தம். அதை நான் காப்பாற்ற முயற்சி செய்வேன், என்று கூறினார். 3வது மற்றும் கடைசி டி.20 போட்டி இதே மைதானத்தில் நாளை நடக்கிறது.

 

The post 2வது டி.20 போட்டியில் இந்தியா அபார வெற்றி; பேட்ஸ்மேன் கணிக்க முடியாத பந்தை வீசுவது மிகவும் பிடிக்கும்: ஆட்டநாயகன் ரவி பிஷ்னோய் பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: