ரயில்வேயில் விளையாட்டுப் போட்டி

 

மதுரை, ஜூலை 27: மதுரையில் நடந்த ரயில்வே மாற்றுத்திறனாளி ஊழியர்களுக்கான விளையாட்டுப் போட்டியில், வெற்றி பெற்றவர்களுக்கு, கோட்ட மேலாளர் ஷரத் ஸ்ரீவஸ்தவா பரிசுகளை வழங்கினார். தென்னக ரயில்வே ஸ்போர்ட்ஸ் அசோசியேஷன் சார்பில், மதுரைக் கோட்ட ரயில்வே மாற்றுத்திறனாளி ஊழியர்களுக்கான விளையாட்டுப் போட்டி அரசரடி ரயில்வே மைதானத்தில் நடந்தது. இதில், சிட்டிங் வாலிபால், ஷாட் புட், ஸ்டம்ப் த்ரோ, பக்கெட் பால் ஆகிய போட்டிகள் நடைபெற்றன.

இதில், பல பிரிவுகளைச் சேர்ந்த 60 ஊழியர்கள் பங்கேற்றனர். போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு கோட்ட ரயில்வே மேலாளர் ஸ்ரீஷரத் ஸ்ரீவஸ்தவா, பரிசுகளை வழங்கினார். நிகழ்ச்சியில், தெற்கு ரயில்வே விளையாட்டு சங்க செயலர் சங்கரன், கோட்டப் பொறியாளர் சந்தீப் பாஸ்கர், உதவிப் பணியாளர் அலுவலர் எசக்கி, சந்திரசேகரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post ரயில்வேயில் விளையாட்டுப் போட்டி appeared first on Dinakaran.

Related Stories: