நாட்டு நலப்பணிகள் திட்டமுகாம் சட்டமன்ற உறுப்பினர் தொடங்கிவைத்தார்

 

தஞ்சாவூர், ஜூலை 27: கும்பகோணம் இதயா மகளிர் கல்லூரியில் நாட்டு நலப்பணித் திட்ட (அலகு 153, 154, 155) மாணவிகள் காவேரி ஆறு தன்னார்வத் தூய்மைக் குழுமத்துடன் இணைந்து கும்பகோணம் பாலக்கரை ஆஞ்சநேயர் கோயில் படித்துறையில் தூய்மைப் பணியினை நேற்று மேற்கொண்டனர். இந்நிகழ்வில் பாட்டில்கள் மற்றும் பிளாஸ்டிக் பைகளைத் தனித்தனியாக சேகரித்தனர். மேலும் ஆற்றில் புதைந்து கிடக்கும் துணிகளை அப்புறப்படுத்தினர். 150 மாணவிகள் கலந்து கொண்ட இந்நிகழ்வைக் கல்லூரி முதல்வர் அருட்சகோதரி முனைவர் யூஜின் அமலா மற்றும் கல்லூரி செயலர் அருட் சகோதரி அமலோற்பவ மேரி ஆகியோர் தொடங்கி வைத்தனர் நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் முனைவர் கை சங்கீதா, திருமதி ந.திலகவதி, முனைவர் ந. மகேந்திரன் ஒருங்கிணைத்து செயல்படுத்தினர்

The post நாட்டு நலப்பணிகள் திட்டமுகாம் சட்டமன்ற உறுப்பினர் தொடங்கிவைத்தார் appeared first on Dinakaran.

Related Stories: