ஆவணமின்றி காரில் கொண்டு சென்ற 12 கிலோ தங்க நகை பறிமுதல்: பண்ருட்டியில் நடந்த வாகன சோதனையில் சிக்கியது

பண்ருட்டி: பண்ருட்டியில் போலீசாரின் நடத்திய வாகன சோதனையின்போது ஆவணமின்றி காரில் கொண்டு சென்ற 12 கிலோ தங்க நகை பறிமுதல் செய்யப்பட்டது. கடலூர் மாவட்டம், பண்ருட்டி போக்குவரத்து போலீசார் பண்ருட்டி-சென்னை சாலையில் சித்திரைசாவடி பேருந்து நிறுத்தம் அருகே நேற்று மதியம் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக கோயம்புத்தூரில் இருந்து வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில், காரில் எந்தவித ஆவணமும் இன்றி சுமார் 12 கிலோ தங்க நகைகள் கொண்டு செல்லப்பட்டது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் காரை ஓட்டி வந்த கோயம்புத்தூரை சேர்ந்த கிருஷ்ணன்(50), ஸ்ரீதர்(56), கார்த்திகேயன்(30), ஜான்(25) ஆகிய 4 பேரை நகையுடன் பண்ருட்டி காவல் நிலையத்துக்கு அழைத்து வந்தனர். அங்கு டிஎஸ்பி பழனி, சப்-இன்ஸ்பெக்டர்கள் எழில்தாசன், சரண்யா ஆகியோர் தீவிர விசாரணை நடத்தி இதுகுறித்து வருமான வரி துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, கடலூரில் இருந்து வருமான வரித்துறை அதிகாரிகள் வரவழைக்கப்பட்டனர். இதைதொடர்ந்து பறிமுதல் செய்யப்பட்ட 12 கிலோ தங்க நகைகளை வருமான வரித்துறை அதிகாரிகளிடம் பண்ருட்டி போலீசார் ஒப்படைத்தனர். இதுகுறித்து வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post ஆவணமின்றி காரில் கொண்டு சென்ற 12 கிலோ தங்க நகை பறிமுதல்: பண்ருட்டியில் நடந்த வாகன சோதனையில் சிக்கியது appeared first on Dinakaran.

Related Stories: