கேரளா சிறுமிகளை கடத்தி குடும்பம் நடத்திய வாலிபர்கள்: போக்சோவில் கைது


திருப்பூர்: கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டம், தொடுபுழா பகுதியில் 16 மற்றும் 17 வயதுடைய சிறுமிகள் கடந்த சில வாரங்களுக்கு முன்பு மாயமானார்கள். இது குறித்து சிறுமிகளின் பெற்றோர் தொடுபுழா போலீஸ் நிலையத்தில் புகாரளித்தனர். இந்நிலையில், அதே பகுதியை சேர்ந்த அதுல் ஜோமி (19), அகிலேஷ் அனில்குமார் (21) என்ற வாலிபர்கள் ஆசை வார்த்தை கூறி அந்த 2 சிறுமிகளையும் அழைத்து சென்றது தெரியவந்தது. மேலும், சிறுமிகள் திருப்பூர் திமுருகன்பூண்டியில் இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்து, தொடுபுழா போலீசார் அங்கு வந்து அந்த சிறுமிகளையும், அந்த வாலிபர்களையும் பிடித்து விசாரித்தனர்.

இதில், வாலிபர்கள் 2 பேரும் சிறுமிகளை ஆசை வார்த்தை கூறி கடத்திச்சென்று சென்னை, பழநி ஆகிய ஊர்களில் விடுதிகளில் தங்கி உள்ளனர். கையிலிருந்த பணம் முற்றிலும் செலவானவுடன் சிறுமிகளுடன் திருப்பூருக்கு வந்து, நண்பர்கள் உதவியோடு திருப்பூர் திருமுருகன்பூண்டியில் தனியாக வீடு வாடகைக்கு எடுத்து தங்கி அங்குள்ள குடிநீர் பாட்டில் தயார் செய்யும் நிறுவனத்தில் வேலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அதுல் ஜோமி, அகிலேஷ் அனில்குமார் ஆகியோரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து 2 சிறுமிகளையும் மீட்டு கேரளாவிற்கு அழைத்து சென்றனர்.

The post கேரளா சிறுமிகளை கடத்தி குடும்பம் நடத்திய வாலிபர்கள்: போக்சோவில் கைது appeared first on Dinakaran.

Related Stories: