இளம்பெண் பலாத்காரம் 3 சிறை வார்டன்கள் டிஸ்மிஸ்

சேலம்: சேலம் மத்திய சிறை 2ம் நிலை காவலர்கள் அருண் (27), சிவசங்கரன் (26). இருவரும் அஸ்தம்பட்டி ரவுண்டானா அருகில் உள்ள சிறைக்காவலர்கள் குடியிருப்பில் வசித்து வந்தனர். கடந்த ஆண்டு ஜனவரி மாதம், இளம்பெண் ஒருவரை யாருக்கும் தெரியாமல் குடியிருப்புக்கு அழைத்து வந்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இதுதொடர்பாக அஸ்தம்பட்டி போலீசார் விசாரணை நடத்தியபோது, அப்பெண்ணை மிரட்டி பலாத்காரம் செய்தது சிறை வார்டன்கள் அருண், சிவசங்கரன் என்பது தெரியவந்தது. அவர்களை அஸ்தம்பட்டி போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் அவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இருவரும் பாதி சம்பளம் பெற்று வந்தனர். அதே போல மொரப்பூரைச் சேர்ந்தவர் மணிவேலன் (29).

இவர் கடந்த ஆண்டு ஜூலை மாதம் மொரப்பூர் பகுதியில் குடிபோதையில் தகராறு செய்தார். இது தொடர்பாக மொரப்பூர் போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்தனர். இதையடுத்து அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். பலாத்கார வழக்கு மற்றும் அடிதடி வழக்கு தொடர்பாக கோவை மத்திய சிறை ஜெயிலர் சிவராமன் துறைரீதியான விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்தார். இதையடுத்து சிறைத்துறை டிஜிபி மகேஷ்வர் தயாள் உத்தரவின்படி சேலம் மத்திய சிறை வார்டன்கள் அருண், சிவசங்கரன், மணிவேலன் ஆகியோரை சிறை கண்காணிப்பாளர் (பொறுப்பு) வினோத், டிஸ்மிஸ் செய்து நேற்று உத்தரவிட்டார்.

 

The post இளம்பெண் பலாத்காரம் 3 சிறை வார்டன்கள் டிஸ்மிஸ் appeared first on Dinakaran.

Related Stories: