தூத்துக்குடி, ஜூலை 26: தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 26வது வார்டு பகுதியில் மாவட்ட சுகாதார அலுவலர் பொற்செல்வன், மாநகர் நல அலவலர் வினோத்ராஜா ஆகியோர் களஆய்வு மேற்கொண்டனர். இந்த பகுதியில் கொசுப்புழு உற்பத்தி உள்ளதா எனவும், குடிநீர் தேக்கி வைக்கப்பட்ட தொட்டிகள், குடிநீர் டிரம்கள் ஆகியவற்றை ஆய்வு செய்தனர். டெங்கு தடுப்பு களப்பணியாளர்கள் மேற்கொள்ளும் பணிகளை பார்வையிட்டு டெங்கு தடுப்பு தொடர்பான ஆலோசனைகளை வழங்கினர். வடகிழக்கு பருவமழை ஆரம்பமாக உள்ளதால் திறந்த நிலையில் உள்ள குடிநீர் தொட்டிகள், சிமெண்ட் தொட்டிகள், தண்ணீர் சேமித்து வைக்கும் பாத்திரங்கள் அனைத்திலும் கொசுக்கள் புகாத வண்ணம் மூடி வைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தகவல்களை பொதுமக்களுக்கு வழங்க வேண்டும் என டெங்கு தடுப்பு களப்பணியளர்களுக்கு அறிவுறுத்தினர்.
The post தூத்துக்குடி மாநகர பகுதியில் டெங்கு தடுப்பு பணிகள் தீவிரம் appeared first on Dinakaran.